வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
#RainAlert: இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்..! உஷாரா இருங்க..!!
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் மார்ச் 24-ஆம் தேதியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல தலைநகர் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.