நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!


Heavy rain is likely in Tamil Nadu tomorrow, India Meteorological Department informs.

வரும் 5-ஆம் தேதி அன்று அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. 

இதை அடுத்து மழை குறைந்து பணிபொழிவு ஆரம்பித்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 30-ஆம் தேதி, வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் வரும் 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து, தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து, லேசானது முதல் மிதமான மழை பரவலாக பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.