பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
சென்னையில் அதிகாலை முதலே வெளுத்துவங்கும் கனமழை; பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி..!!

சென்னை அண்ணா நகர், பாடி, அம்பத்தூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
இரவில் நேரத்தில் இருந்தே லேசான தூறலுடன் ஆரம்பித்த மழையானது 8 மணிக்கு மேல் வலுவடைய துவங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
திடீரென கனமழை பெய்ததால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிலர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என தொலைக்காட்சியை பார்த்த வண்ணமே இருந்தனர்.