நான் செத்துட்டனா?.. தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் போட்டோஸ் எடுத்துக்கொண்ட நடிகர் ஜி.எம்.குமார்..!
Rain Alert: தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
Rain Alert: தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதமாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.