இன்றைய வானிலை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இங்கே.!



Heavy Rain Alert Issued for Chennai and 3 Nearby Districts Today’s Weather Update

இன்று 4 மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடதமிழகம் கடலோரப்பகுதியில் வலுகுறைந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். தொடர்ந்து, புதுவை மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்.

இன்றைய வானிலை (Today Weather):
இதனால் இன்று (02-12-2025) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக கனமழை.. அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷார்.. இன்றைய வானிலை நிலவரம்.!

chennai weather

சென்னை வானிலை (Chennai Weather Today):
தலைநகர் சென்னையில் இன்று (02-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.