AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
காலையிலேயே வந்த அலர்ட்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுக்கும் மழை.. 8 மாவட்டங்கள் உஷார்.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் நிலவிய புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து அடுத்த 12 மணிநேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை:
இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடைவிடாத மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக கனமழை.. அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷார்.. இன்றைய வானிலை நிலவரம்.!

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகள் விடுமுறை:
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, நடக்கவிருந்த பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை:
அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: Red Alert: 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பொளக்கப்போகும் மழை.. மக்களே கவனம்.!