16 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

16 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!



Heavy rain alert for 16 districts

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோரப்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான கனமழை முதல் மிககனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

1-ஆம் தேதியை பொருத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

16 districts

சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 

தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கனமழையும் பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.