90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்! அச்சம் வேண்டாம்! ஆனால் நீங்கள் அவசியம் இதை பண்ணுங்க! அமைச்சர் விஜயபாஸ்கர்
90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்! அச்சம் வேண்டாம்! ஆனால் நீங்கள் அவசியம் இதை பண்ணுங்க! அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமுக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் நோயாளிகளை நலம் விசாரித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாடு அதிக வேகத்தில் பணியாற்றி வருகிறது. இதுவரை 36 லட்சம் பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. 2.72 லட்சம் பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த பீதி தேவையில்லை. தற்போது வெளியிடப்படும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடி கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள். மற்ற 90 சதவீதம் பேர் இணை நோய்களையும் கொண்டவர்கள்.
எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதேநேரத்தில் லேசான அறிகுறிகள் தென்படும்போதே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அரசு மருத்துவர்கள் சவால் இன்றி சிகிச்சை அளிக்க முடியும். இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.