மாணவிகளை வைத்து மசாஜ்... செருப்பால் அடித்த பெற்றோர்... போக்சோவில் கைதான தலைமையாசிரியர்.!head-master-of-an-elementary-school-booked-under-pocso

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை மசாஜ் செய்ய சொல்லி தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள  கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜா(52). இவர் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை தனது அறைக்கு அழைத்து உடலில் மசாஜ் செய்ய சொல்லி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

tamilnaduஇது தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் தலைமையாசிரியரை கற்களைக் கொண்டும் செருப்பாலும் அடித்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெற்றோரை சமாதானம் செய்து மாணவிகள் மற்றும்  ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

tamilnaduஇந்த விசாரணையை தொடர்ந்து தலைமை ஆசிரியர் ராஜா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் பள்ளி கல்வித்துறை அவரை தலைமையாசிரியர் பணியில் இருந்தும் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.