பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு!Head master harassment to girls in Salem

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

Salem

அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செம்மண்கூடல் ஊராட்சி கந்தம்பிச்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியராக வாழப்பாடி சோமம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

Salem

இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.