தமிழகம்

ஆசிரியர்களின் பதவி உயர்வில் 20% குறைப்பு; போராடியவர்களுக்கு வாய்ப்பே இல்லை-பள்ளிகல்வித்துறை.!

Summary:

gvt teachers promotion decrease 20% - school education

பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் அதே தேதியில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகமும் அன்றே வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில், 100-க்கு 70% பணிமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்த வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தற்போது 20% குறைக்கப்பட்டு 50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வந்த 30 சதவீத பணியிடங்கள் தற்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ்  உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வே கிடையாது என்று நேற்று உத்தரவிட்ட நிலையில் தற்போது பணி மூப்பு அடிப்படையில் பெற்று வந்த பதவி உயர்வு சதவீதத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Advertisement