AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி? மாஸ் காட்டிய காவல்துறை...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 8 வயது சிறுமி மீது நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளியை கண்டறிய தீவிர தேடுதல்:
20-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பொதுமக்களிடம் பகிர்ந்து, தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சூலூர்பேட்டையில் கைது
வடமாநிலத்தை சேர்ந்த குற்றவாளி, ஆந்திர மாநிலத்தின் சூலூர்பேட்டை ரெயில்நிலையம் அருகே தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் உள்ளூர் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார் மேலும் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் குற்றவாளி.
இதையும் படிங்க: 12 நாட்கள் தீவிரமாக தேடல்! தமிழகத்தை உலுக்கிய 10 வயது சிறுமி பலாத்காரம்! வடமாநில வாலிபரின் வெறிச்செயல்! ரயில்வே ஸ்டேஷனில் குற்றவாளி கைது...
சிசிடிவி உதவி
75 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியின் பயண விவரங்களை கண்டறிந்து கைது மேற்கொண்டனர். மதுபோதையில் இருந்த குற்றவாளி, விசாரணையின் போது பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாக்ஸோ சட்டம் மற்றும் BNS 118, 351, 97 ஆகிய பிரிவுகளின் கீழ் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கைதான நபர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்...