பெரும் சோகம்.. போதைக்கு அடிமையான கணவர்.. விரக்தியில் மனைவி எடுத்து விபரீத முடிவு..!

பெரும் சோகம்.. போதைக்கு அடிமையான கணவர்.. விரக்தியில் மனைவி எடுத்து விபரீத முடிவு..!


Great tragedy.. Husband addicted to drugs.. In desperation wife took tragic decision..!

ஆதிச்சபுரம் கீழமருதூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் மோகன் -  செல்வகுமாரி தம்பதியினர். மோகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மோகன் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வகுமாரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Husband addicted drugs

இதனையடுத்து அங்கு சென்ற செல்வகுமாரி மிகுந்த மன வேதனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வகுமாரி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இவ்வாறு செல்வகுமாரி மயங்கி கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணவன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.