பேத்திகள் பதறவைக்கும் செயல்.. பாட்டியை தீ வைத்து கொளுத்தி கொலை செய்த பயங்கரம்..!

பேத்திகள் பதறவைக்கும் செயல்.. பாட்டியை தீ வைத்து கொளுத்தி கொலை செய்த பயங்கரம்..!


grand-mother-murders-by-grand-daughters

பாட்டியை பராமரிக்க முடியாததால், தீ வைத்து கொலை செய்த 2 பேத்திகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், ஆதாம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதியவேளையில், சாலை ஓரமாக எரிந்த உடல் ஒன்று கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

இதனைக் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் எரிந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது அந்த உடலை ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவில் எடுத்து வந்து தூக்கி வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

Trinelveli

இதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் பிடித்து விசாரிக்கையில், பழையபேட்டை கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகிய இருவரையும் தான் கொலைக்கு காரணம் என தெரிவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.

அத்துடன் அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், தனது பாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியாத நிலையில், அவரை தீ வைத்து கொலை செய்ததாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களே கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால் காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.