தமிழகத்தில் இன்று முதல் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்.!

தமிழகத்தில் இன்று முதல் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்.!


Government and private school admissions going on

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமானதை அடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் 1 முதல் 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பொது தேர்வானது நடத்தப்பட்டது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12 மாணவர்களின் பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் கொரோனா வைரஸின் இன்னும் குறையாததால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துகளுக்கேற்ப சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அரசு, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலும் 24 ஆம் தேதியில் இருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அரசு, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.