இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தாகம் தீர்க்க இடிமின்னலுடன் கொட்டித் தீர்த்த மழை! சென்னைவாசிகள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று மாலை துவங்கி பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வருடமாகவே மழையே இல்லாமல் மிகவும் வறண்ட நிலையில் சென்னை காணப்படுகிறது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நீரின்றி வறண்டு போயின. இதனால் சென்னையில் வாழும் மக்கள் குடிநீருக்காகவும் தங்களது அன்றாட தேவைகளுக்காகவும் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 80 சதவிகிதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் உள்ள ஆழ்துளாய் கிணறுகிளிலும் நீர் இல்லாமல் வறண்டு போயின. இதனால் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக பல ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஆங்காங்கே பெய்த மழை இன்று சற்று வலுவடைந்து சென்னையின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் தங்களது நீர் பற்றாக்குறை குறையும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.