#Breaking: விண்ணைப்பிளந்த தங்கத்தின் விலை.. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்ததால் பெரும் சோகத்தில் இல்லத்தரசிகள்..!

#Breaking: விண்ணைப்பிளந்த தங்கத்தின் விலை.. ஒரேநாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்ததால் பெரும் சோகத்தில் இல்லத்தரசிகள்..!



gold-rate-increased-today-chennai

இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கம், வெள்ளி விலை நிலவரமானது தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஏறுமுகங்களை காணும் தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர்ந்து தற்போது 40,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று ரூ.280 உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.640 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

tamilnadu

கிராம் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.5270-க்கு விற்பனையாகிறது. அதுபோல வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.40 காசுகள் அதிகரித்து ரூ.68.70-க்கு விற்பனையாகிறது.