தமிழகம்

தங்கம் விலையை கேட்டாலே ஒரே படபடப்பு.! தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.!

Summary:

தங்கம் விலையை கேட்டாலே ஒரே படபடப்பு.! தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.!

தமிழகத்தில் சாதாரண குடும்பம் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்கு தங்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு தங்கம் வாங்குவது என்றாலே குஷி தான். ஆனால் தற்போது தங்கம் விலையை கேட்டாலே தங்கம் வாங்கும் எண்ணம் போய்விடும். 

அந்த அளவிற்கு தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று 3-வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 24 உயர்ந்து கிராம் 4,411 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.192 அதிகரித்து 35,288க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.65.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement