அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தங்கத்தின் விலை தொடர்ந்து இன்றும் ஏறுமுகம்.. ரூ.44,000-த்தை நெருங்குவதால் கவலையில் மக்கள்..!!
உலக அளவில் தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் அதன் மீதான வரி, மக்களின் நுகர்வு போன்ற பல காரணங்களால் அதன் விலை என்றுமே உச்சத்தில் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரூ.35,000 என்று இருந்த தங்கத்தின் விலையானது தற்போது ரூ.40,000 அளவில் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
-ya9p3.jpeg)
சென்னையில் இன்று ஆபரணதங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.5450-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.