கடவுளே உனக்கு கண் இல்லையா..! 10 வருட கால குழந்தை ஏக்கம்.. எங்களுக்கும் ஒரு குழந்தை என்ற கனவோடு காத்திருந்த தாய்.. பிரசவத்தில் தாய் சேய் பலியான பரிதாப சம்பவம்..!



God, don't you have eyes..! 10 years of longing for a child.. The mother who was waiting with the dream of having a child for us too.. Tragic incident where the mother died in childbirth..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம்- முத்துமாரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்து சிறிது நாட்களிலே உயிரிழந்தது. இதனால் தம்பதியினர் இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் முத்துமாரி 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கருவுற்றுள்ளார். மேலும் இவர் பிரசவத்திற்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாள் காத்திருப்பதற்குப் பிறகு தங்களுக்கு ஒரு குழந்தை வரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் தம்பதியினர் இருந்துள்ளனர்.

Mother died in childbirth

இந்நிலையில் முத்துமாரிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் முத்துமாரி மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக பலியாகி உள்ளார். மேலும் தாய் இறந்த சிறிது நேரத்திலேயே பிறந்த குழந்தையும் பரிதாபமாக பலியாகி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் உறவினர்கள் மருத்துவமனையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பலியான முத்து மாரியின் சடலத்தை உறவினர்களிடம் காட்டாமல் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முத்துமாரி தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்ததோடு  சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சமரசம் செய்து முத்துமாரியின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். எங்களுக்கும் ஒரு குழந்தை என்ற கனவோடு காத்திருந்த தாய் பிரசவத்தில் குழந்தையுடன்  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.