திருமணம் முடிந்து நான்கு மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

திருமணம் முடிந்து நான்கு மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.


girl-suicide-in-thootukudi-after-4-months-of-marriage

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதலித்து திருமணம் செய்த புது பெண் ஒருவர் திருமணம் முடிந்த 4 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழநாலுமூலைகிணறு என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரபாரகன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Crime

இந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்தே கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பிரபாகரன் வேளைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஆஷா வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆஷாவின் பெற்றோர் தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் இது கொலை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.