லியோ திரைப்படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.. யாரென்று தெரிந்து அதிர்ச்சியான விஜய் ரசிகர்கள்.?
வாந்தி எடுத்து மயங்கி பரிபோன உயிர்.. 7 ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்..!
வாந்தி எடுத்து மயங்கி பரிபோன உயிர்.. 7 ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்..!

7ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியை அடுத்த பொங்கலூரில் வசித்து வருபவர் மாணிக்கம். இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிதர்சனா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், இவர் இன்று வழக்கம் போல காலை பள்ளிக்குச் சென்றபோது, திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அரசு மருத்துவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து விசாரணை நடத்திய நிலையில், உயிரிழந்த 7ஆம் வகுப்பு மாணவி நிதர்சனா ரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து வகுப்பறையில் சக மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மற்ற மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.