பிரசவத்திற்காக தந்தை வீட்டிற்கு வந்த நிலையில், 8 மாதங்களுக்கு பின் எலும்புகூடாக மீட்கப்பட்ட இளம்பெண்! கள்ளக்காதல் கொடூரத்தின் பின்னணி!!



girl-murdered-for-illegal-affairs

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கூத்திப்பாறை பகுதியை சேர்ந்தவர் லிங்கம். இவரது மகள் சத்யபிரியா. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த வசந்த பாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக தனது தந்தை வீட்டிற்கு வந்து குழந்தை பிறந்த பிறகும் கணவர் வீட்டிற்கு செல்லாமல் 7 மாதங்களாக அங்கேயே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.  இந்த நிலையில் அவருக்கு ஞான குருசாமி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் இல்லையென்றால் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலைக்கு சென்ற அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 8 மாதங்களாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஞானகுரு சாமியுடன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

illegal affairs

அப்பொழுது அவர் சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், சாத்தூர் காட்டுப்பகுதிக்கு  அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் உடலை அங்கேயே போட்டுவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து சத்தியபிரியாவின் உடலை எலும்புக்கூடாக மீட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.