3 ஆண்களுடன் தகாத பழக்கம்! இரண்டாவது காதலனை தீர்த்துக்கட்டிய பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
காட்பாடி வாஞ்சூரை சேர்ந்த சுனில் என்ற வாலிபர் சமீபத்தில் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக கிடந்துள்ளார் அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டநிலையில் அவருக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் தகாத உறவு இருப்பது தெரிய வந்தது.
மேலும் கோகிலாவும் மாயமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவருக்கு மணிகண்டன் என்ற ஆம்புலன்ஸ் டிரைவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரை விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கோகிலாவின் கணவர் இப்ராகிம். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் விருத்தப்பட்டியில் வசித்து வந்தனர். அவர்களுடன் இப்ராஹீமின் நண்பர் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவரும் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கோகிலாவுக்கு சுனில் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விபரம் தெரியவந்த நிலையில் இப்ராஹிம் கோகிலாவை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுனில் இப்ராஹிமை அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் அவமானத்தில் இப்ராகிம் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே சென்றுவிட்டார.
அதனை தொடர்ந்து மணிகண்டணும், கோகிலாவும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கோகிலா மணிகண்டனுடன் நெருங்கிப் பழக தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுனில் தொடர்ந்து கோகிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சுனிலை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கோகிலாவின் அப்பா மற்றும் மணிகண்டனின் நண்பர் சதீஷ் குமார் ஆகியோர் சுனிலை அடித்துக் கொன்று பாலாற்றங்கரையில் தூக்கி போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகவிருக்கும் கோகிலாவையும் அவரது தந்தையையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.