தமிழகம்

ஒத்த செல்பியால் உயிரை விட்ட இளம்பெண்! இதுதான் நடந்ததா? அம்பலமான அதிர்ச்சி பின்னணி!

Summary:

Girl commit suicide

செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது அக்கா மகள் மோனிஷா. 22 வயது நிறைந்த இவர் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். மோனிஷாவின் அம்மா, அப்பா இருவரும் ஏற்கனவே இறந்து விட்டநிலையில் அவர் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் வசித்து வந்துள்ளார் 

இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், மோனிஷாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தினமும் மோனிஷா கல்லூரிக்கு செல்லும்போது,  தன்னை காதலிக்ககூறி வற்புறுத்தியும்  வந்துள்ளார்.

 

இவ்வாறு அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையிலும் மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில்  அந்த இளைஞர் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, ஒன்றாக இருப்பது போல் புகைப்படம் எடுத்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் தன்னை காதலிக்காவிட்டால் அந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மோனிஷாவை மிரட்டி வந்துள்ளார்.

இதனால் பதறிப்போன அந்த மாணவி மனமுடைந்து அந்த வாலிபர் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ளார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement