வீட்டில் தனியாக இருந்த சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி! புத்தாண்டு இரவு போலீசுக்கு வந்த அந்த போன் கால்!

வீட்டில் தனியாக இருந்த சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கதி! புத்தாண்டு இரவு போலீசுக்கு வந்த அந்த போன் கால்!



Girl called police customer care for abuse

சென்னை காவல் கட்டுப்பாடு அறைக்கு புத்தாண்டு இரவு 12 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்திசையில் பேசிய பெண், இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக பதற்றத்துடன் கூறியுள்ளார். யார் என்ன என்று விசாரிப்பதற்குள் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த தொலைபேசி நம்பரை வைத்து அந்த பெண்ணின் முகவரி கரிமேடு எம்.ஜி. ஆர் தெரு என்று தெரியவந்தது. உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் அங்கு சென்று சம்மந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Crime

அந்த விசாரணையில் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தவர் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்றும், முகேஷிற்கும் அந்த பெண்ணிற்கும் ஏற்கனவே வாக்குவாதம் இருப்பதும் தெரியவந்தது. மேலும், தான் வீட்டிற்குள் நுழைந்து தகராறு செய்தது உண்மைதான் ஆனால் பாலியல் தொல்லை தரவில்லை என முகேஷ் கூறியுள்ளார்.

அந்த பெண்ணிடம் விசாரித்ததில், ஆமாம், அவர் குடித்துவிட்டு தகராறு செய்தது உண்மைதான். ஆனால், பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. போன் செய்து பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்துவருவதாகவும், தனியாக இருக்கும் அந்த பெண்ணிடம் முகேஷ் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.