மக்களின் அலட்சியம், சாலையோர ஆக்கிரமிப்புகளால் திணறும் செஞ்சி: நெரிசல் பயணத்தால் மக்கள் வேதனை.!

மக்களின் அலட்சியம், சாலையோர ஆக்கிரமிப்புகளால் திணறும் செஞ்சி: நெரிசல் பயணத்தால் மக்கள் வேதனை.!



Gingee Traffic Public Complaint 

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று பின்னணி கொண்ட ஊர் செஞ்சி. இது நகராட்சி பட்டியலில் இருக்கிறது. மேலும், திண்டிவனம் - திருவண்ணாமலை பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்நகரில் இருக்கும் நான்குமுனை சந்திப்பு, வெளியூர் பயணிகளுக்கு முக்கிய இடம் ஆகும். 

சென்னையில் இருந்து திண்டிவனம் வழியே திருவண்ணாமலை, பெங்களூர் நோக்கி பயணிக்கும் வாகனங்களும், அங்கிருந்து திண்டிவனம் வழியே புதுச்சேரி செல்லும் வாகனங்களும் இவ்வழித்தடத்தில் மட்டுமே பயணித்தாக வேண்டும்.

இந்நகரில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் திருப்புவிழாவுக்காக காத்திருக்கிறது. பேருந்து நிலையம் சென்று வரும் பகுதி மிகவும் குறுகலாக உள்ளது. 

ஜவுளிக்கடையில், மளிகைக்கடைகள் என இருபுறமும் இருக்கும் கடைகளுக்கு செல்லும் மக்கள் தங்களின் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதும், நடைபாதையை ஆகிரமிப்பு செய்த வியாபாரிகளின் செயலாளாலும் நான்கு முனை சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை மிகுந்த நெரிசலுடன் காணப்படுகிறது. 

அதுமட்டுமல்லாது, பகல் வேளைகளில் மக்களின் பயன்பாடு இருக்கும்போதே, கனரக வாகனங்களில் வரும் பொருட்களை பெருநிறுவன உரிமையாளர்கள் இறக்க அனுமதி செய்கின்றனர். பேருந்து நிலையம் திறக்கப்படாமேலேயே இவ்வுளவு நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததும், பேருந்துகளும் இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும். செஞ்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து 1 கி.மீ தூரத்திற்குள் இருக்கும் இடத்திற்குள் நிலவும் ஏகபோக நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலையோர ஆகிராம்புகளை அகற்றவும் அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.