விஸ்வரூபம் எடுக்கும் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்.! அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு.!



general body meeting permision

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ்&இபிஎஸ் ஆதரவாளர்கள்  தனித்தனியாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஆர்பி உதயகுமார், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வானகரம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலருமான பெஞ்சமின், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.