கேஸ் சிலிண்டர்க்கு.. அதிக பணம் கேட்டால் இந்த எண்ணுக்கு கால் செய்யுங்கள்.!
வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் நபர்கள், பில்லில் இருக்கும் தொகையை விட கூடுதலான தொகையை நுகர்வோர்களிடம் வசூலித்து வருகின்றனர். இது பற்றி விவரம் கேட்டால் டெலிவரி சார்ஜ் என்று கூறி நுகர்வோரை அதை தரச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இதை நாம் தருவது அவசியமா? இல்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றது.
இது பற்றி, "கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா" அமைப்பின் துணை இயக்குனர் M.R. கிருஷ்ணன் கூறுகையில், " சமையல் எரிவாயு சிலிண்டர் டோர் டெலிவரி செய்யப்படும் போது எந்த ஒரு சார்ஜசும் நுகர்வோர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பில்லில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகையை மட்டும் கொடுத்தால் போதும். டெலிவரி சார்ஜ் என்பது நுகர்வோருக்கு இல்லை. அது ஃப்ரீ டெலிவரி தான்.

தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் டெலிவரி செய்யும் நபருக்கு நுகர்வோர் பணம் கொடுக்கலாம். ஆனால், தற்போது அதை இயற்றப்படாத சட்டமாக்கிவிட்டனர். ஏற்கனவே பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்த தொகையில் டெலிவரி சார்ஜ்க்கும் சேர்த்து தான் நாம் செலுத்தியுள்ளோம். எனவே அதை தனியாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் படிங்க: பழம் நல்லது தான்.. ஆனா அதை இப்டி சாப்பிட்டா அது ஆபத்தை தரும்.. உஷார்.!
கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யக்கூடிய நபர்களுக்கு அவரவர் வேலை செய்யும் ஏஜென்சிகள் சம்பளத்தில் அந்த டெலிவரி தொகையையும் சேர்த்து தான் கொடுக்கின்றனர். எனவே, நுகர்வோர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியது இல்லை. அப்படி யாராவது உங்களை டெலிவரி சார்ஜ் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தினால், பொதுமக்கள் வழக்கு தொடரலாம்.
மேலும், இது பற்றி புகார் அளிக்க, ' 18002333555 ' என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது என்ற, ' https://pgportal.gov.in/ ' வெப்சைட்டின் மூலம் புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: "16 மணி நேரம் வேலை.. சம்பளம் மட்டும் கேக்காதீங்க".. ஐடி நிறுவனத்தின் அராஜகம்.. ஆட்சியரிடம் கதறல்.!