தமிழகம்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம்; வீடுகளை இழந்து விவசாயிகள் கண்ணீர்!

Summary:

full damage of pudukottai in gaja

தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் காற்று பலமாக வீசத் துவங்கியுள்ளது. வீடுகளின் மேற்கூரைகள் பரந்து செல்லும் அளவிற்கு காற்று பலமாக வீசியது. மேலும் மரங்களும் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தும் பாதியில் முறிந்தும் காற்றில் பறந்து சென்றுள்ளது. இதனைக் கண்டு மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை காற்று கிழக்கு மேற்காக சுழன்று அடித்துள்ளது. இதில் பல்வேறு வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இதனால் அச்சப்பட்ட மக்கள் அருகில் இருக்கும் கான்கிரீட் வீடுகளில் குடியேறி உள்ளனர். மேலும் வீடுகளின் முன்பு இருந்த மரங்கள் அனைத்தும் காற்றில் முறிந்து எழுந்துள்ளது. பல வீடுகளின் மேற்கூரைகள் மீது மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மணிநேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் 6 மணிக்கு காற்று வடக்கு தெற்காக பலமாக வீசத் துவங்கியுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறாமல் மிகுந்த அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக கருதப்படுவது நெல், வாழை, முந்திரி, பலா மற்றும் தென்னை மரங்கள்தான். இந்த கஜா புயலின் தாக்கத்தினால் வாழை, முந்திரி, பலா, தென்னை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. இதனால் விவசாயம் கஜா புயலால் புதுக்கோட்டையில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகள் மிகுந்த கண்ணீரும் கவலையுமாக உள்ளனர்.Advertisement