தமிழகம்

ரேஷன் பொருட்கள் அனைத்தும் இலவசம்! முதல்வர் அதிரடி!

Summary:

Free ration

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பர‌வுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் 21 நாட்கள் ஊரடங்கை மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.  மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.  கொரோனாவை எதிர்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


Advertisement