தமிழகம்

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்..

Summary:

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்..

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ்நாட்டில் 2011-2016 வரை ஆளுநராக செயல்பட்டவர் ரோசய்யா. 88 வயதான இவர் ஆந்திர மாநிலம் குண்டூரில் 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 2009-2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரியாக செய்லபட்டுள்ளார். மேலும், 2014-ம் ஆண்டில் கர்நாடக பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார்

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.


Advertisement