தமிழகத்தில் அதிவேகத்தில் பரவுகிறது H1N1 பன்றிக்காய்ச்சல்... முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பகிரங்க எச்சரிக்கை.. மக்களே விழிப்புடன் இருங்கள்.!Former Minister Vijayabaksar Warn H1N1 Swine Flu

H1N1 பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அதனை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் சாரல் விழாவில் சாதனை புரிந்தோருக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்களில் H1N1 பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. 

pudukkottai

இந்த செய்தியை தமிழக அரசு தற்போது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இது வேதனையை அளிக்கிறது. மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் அதிகளவு பரவுகிறது. சென்னை எழும்பூர் மருத்துவமனை உட்பட பல மருத்துவமனையில் மக்கள் சிகிச்சைக்கு அனுமதியாகின்றனர். 

pudukkottai

இவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கட்டமைப்புக்கள், படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதனைத்தவிர்த்து டெங்கு போன்ற காய்ச்சலும் பரவுகிறது. தமிழகத்தில் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளன. அமைச்சர் எந்த குற்றசாட்டை முன்வைத்தாலும் மறுக்கிறார். அதனை விடுத்தது மாத்திரை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.