நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கொரோனோ பாதிப்பில்லை! உறுதியான நிலையில் திடீரென உயிரிழந்த இளைஞர்! வெளியான பகீர் காரணம்!

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் சுற்றிப்பார்த்த அவர்கள் சமீபத்தில் ஈரோடு சென்றுள்ளனர்.இந்நிலையில் அவர்கள் 7 பேரில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அவரை தாய்லாந்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனனர். அதனால் அவர் 15-ந்தேதி கோவை விமான நிலையம் வந்தனர்.
அப்பொழுது சுகாதாரத்துறையினர் டான் ரோசாக்கை சோதனை செய்துள்ளனர். மேலும் அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளது என அவரை விமானத்தில் அனுப்ப மறுத்துள்ளனர். பின்னர் டான் ரோஷாக்கை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு டான் ரோசாக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சென்னை ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. ஆனால் இதற்கிடையில் டான் ரோசாக் நேற்று திடீரென உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த டான்ரோசாக்கிற்கு கொரோனா அறிகுறி இல்லை. ஆனால் அவருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. அதனால் அவர் உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.