திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு; ரூ. 50,000 வழங்க தமிழக அரசு அரசாணை...!!

திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு; ரூ. 50,000 வழங்க தமிழக அரசு அரசாணை...!!


For free weddings performed in temples; Rs. 50,000 Tamil Nadu government order...

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு, ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் செலவின தொகையை, ரூ.20,000 திலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு வழங்கப்பட்டு வரும் திட்ட செலவை, 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தியும், வருடம் தோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில், 25 ஏழைகளுக்கு 20 மண்டலங்களில் 500 பேருக்கு திருமணம் நடத்தவும், இதற்கு தேவைப்படும் மொத்த செலவுத்தொகையை ஒரு கோடி திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும், கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஆணையிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு இந்து சமய அறநிலை துறை சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு வழங்கப்பட்டு வரும் செலவுத் தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி திருக்கோயில் நிதி மூலம் செலவு செய்ய அரசாணை பிறப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துறையின் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 4 கிராம் திருமாங்கல்யம், மணமக்கள் உடைகளுக்கு ரூ.3000, இரு வீட்டாரை சேர்ந்த இருபது பேருக்கு, உணவு செலவு ரூ.2000 மற்றும் சீர்வரிசை பாத்திரங்கள், சேர்த்து ரூ.50000 வழங்க இந்து சமய அறநிலை துறை ஆணையரின் கருத்தை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது.

பரிசீலனைக்கு பிறகு திருக்கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு அனுமதிக்கப்பட்ட செலவுத் தொகையை, இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதால், ஒரு இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவு தொகையை ரூ.20,000 இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.