கொரோனாவை கட்டுப்படுத்த உழைக்கும் பணியாளர்களுக்கு 7 நாட்களாக உணவு வழங்கும் சேவாபாரதி!
கொரோனாவை கட்டுப்படுத்த உழைக்கும் பணியாளர்களுக்கு 7 நாட்களாக உணவு வழங்கும் சேவாபாரதி!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால் தமிழகத்திலும் கொரோனா அதிகரிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி, தன்னார்வலர்களும் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருபவர்களுக்கும், ஆலங்குடி காவல் துறை நண்பர்கள், வடமாநில நண்பர்கள், பேரூராட்சி துய்மை பணியாளர்கள், பாச்சிக்கோட்டை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேர்த்து 130 பெயருக்கு 7-ஆவது நாளாக சேவா பாரதி சார்பாக
உணவு வழங்கப்பட்டு வருகிறது.