கொரோனாவை கட்டுப்படுத்தும் ஹீரோக்களுக்கு உணவு வழங்கிய ஆலங்குடி சென்டெனியல் லயன்ஸ்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஹீரோக்களுக்கு உணவு வழங்கிய ஆலங்குடி சென்டெனியல் லயன்ஸ்!



food-for-corona-action-people

சீனாவின் உகான் நகரில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைவாக இருந்த நிலையில், டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால் தமிழகத்திலும் கொரோனா அதிகரிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Food

தமிழகத்தில் சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி, தன்னார்வலர்களும் கொரானா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல், தங்களது குடும்பங்களையும் பிரிந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருபவர்களுக்கும், ஆலங்குடி காவல் துறை நண்பர்கள், தினக்கூலி வேலைக்காக ஆலங்குடியில் தங்கியிருக்கும் வடமாநில நண்பர்கள், பேரூராட்சி துய்மை பணியாளர்கள் அனைவருக்கும், ஆலங்குடி சென்டெனியல் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக திரு.வேலு.விஜயபாரதி தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக இந்த சேவையை ஆலங்குடி சேவாபாரதி இளைஞர்கள் செய்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.