கோவில் கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழக அரசு.! முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல் பெண் ஓதுவர்.!

கோவில் கருவறைக்குள் தீண்டாமையை உடைத்தெறிந்த தமிழக அரசு.! முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல் பெண் ஓதுவர்.!



first-woman-priest-in-tamilnadu

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினை சேர்ந்த அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தைக் கடந்த 1970ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனாலும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்தநிலையில், கலைஞரால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை 51 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தி.மு.க அரசின் 100வது நாளான நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதில், தமிழகத்தில் முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா என்ற 28 வயது பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் சுஹாஞ்சனாவுக்கும், முதலமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டது குறித்து சுஹாஞ்சானா கூறுகையில், எங்களது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம். நான் 10-ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டேன். இதற்காக இசைப்பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போது அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன். பெண்கள் பல துறையில் பயணித்தாலும், ஓதுவராகவும் பணியாற்ற முடியும் என்பதால் இதில் ஆர்வமாக விண்ணப்பித்து சேர்ந்து உள்ளேன். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த பணியை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.