நள்ளிரவில் கிணற்றில் விழுந்து தத்தளித்த பெண்: கும்மிருட்டில் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!Firefighters rescued a woman who fell into a well in the middle of the night

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி அமுதா (50). இவர் மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று இரவு அமுதா வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுதாவை காணவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அமுதா வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அமுதாவை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கயிறு மூலமாக தீயணைப்பு வீரர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்த ளித்த அமுதாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

இதன் பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமுதா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நேசமணிநகர்காவல்தூறையினர் மருத்துவமனைக்கு சென்று அமுதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அமுதா கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது தெரியவந்துள்ளது.