பண்ணையில் திடீர் தீ விபத்து! தீக்கு இரையான 3000 கோழி குஞ்சுகள்!!

பண்ணையில் திடீர் தீ விபத்து! தீக்கு இரையான 3000 கோழி குஞ்சுகள்!!


Fire Accident in poultry farm in kanchipuram

காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் என்னும் கிராமம் ஒன்றில் கோழி பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் 3000 கோழி குஞ்சுகள் தீக்கு இரையாகி உள்ளனர்.. 

முசரவாக்கம்  கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர், அவருக்கு சொந்தமான நிலத்தில் 3 ஆயிரம் பிராய்லர் கோழிகுஞ்சுகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை நேரத்தில் கோழி பண்ணையானது திடீரென்று தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது. கோழி பண்ணை முழுவதும் தீ பரவி உள்ளது.

இதனால், கோழிக்குஞ்சுகள் அனைத்தும் நெருப்பில் பொசுங்கிப் போகின. இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ராஜேந்திரன் கூறுகையில் மின்வெட்டு ஏற்பட்டிருந்தது, திடீரென உயர் மின்னழுத்தம் அந்த காரணத்தினால் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு சில கோழிகள் சில தினங்களில் விற்பனைக்கு அனுப்பப்பட இருந்த நிலையில் அதுவும் தீயில் இறந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் அவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.