தமிழகம்

7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை.! அதிர்ச்சியில் மனைவி எடுத்த அதிரடி முடிவு.!

Summary:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ம

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.

ஆனாலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த மண்டையூர் கிராமத்தை சேர்ந்த 44 வயது நிரம்பிய நபர் அவரது 7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இது குறித்து சிறுமி அவரது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement