தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டாக சீரழித்த தந்தை, மாமா, உறவினர்.. திருவாரூரில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!
திருவாரூரில் உள்ள வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம், மேலகாலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). இவர் குடும்ப பிரச்சனையின் காரணமாக தனது மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டு பெண் குழந்தைகள் தந்தையின் வளர்ப்பிலும், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை தாத்தா பாட்டியிடமும் வளர்ந்து வந்துள்ளனர்.
கார்த்திக்கிடம் வளர்ந்து வந்த பெண் குழந்தைகளில் ஒருவர் காவ்யா (வயது 13). மாற்றுத்திறனாளியான இவரை மதுபோதையில் அடிக்கடி கார்த்திக் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் மாமா சுதாகர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இருவரும் சிறுமியை மிரட்டி அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் சிறுமியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அருகில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ந்த அக்கம்பக்கத்தினர், திருவாரூரில் உள்ள சமூக குழந்தைகள் பாதுகாப்புதுறை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சமூக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமி பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அத்துடன் அதிகாரிகள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை கார்த்திக், மாமா சுதாகர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மூவர் மீதும் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கார்த்திக், சுதாகர் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.