பிரபல ரவுடி சுட்டுக் கொலை... போலி என்கவுண்டரா.? வெளியான பரபரப்பு கடிதம்.!

பிரபல ரவுடி சுட்டுக் கொலை... போலி என்கவுண்டரா.? வெளியான பரபரப்பு கடிதம்.!


famous-rowdy-killed-in-encounter-a-controversial-letter

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதால் தற்காப்பிற்காக சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி விஷ்வா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். சில மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் இவரை காவல்துறை தேடி வந்தது.

tamilnaduஇந்நிலையில் சுங்கூர் சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த இவரை காவல்துறை கைது செய்து அழைத்து வந்த போது அவர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது காவல்துறையினர் தற்காப்பிற்காக சுட்டதில் ரவுடி விஷ்வா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக விஷ்வா முன்னர் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

tamilnaduதன்னை என்கவுண்டரில் கொலை செய்வதற்கே ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் தயாளன் ஆகியோர் முயற்சி செய்து வருவதாகவும் தான் என்கவுண்டர் செய்யப்பட்டால் அவர்கள் இருவரும் தான் காரணம். எனவே இது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டும் என சில தினங்களுக்கு முன்பே விஷ்வா காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்திருக்கிறார். இந்த கடிதம் தற்போது வெளியாகியிருப்பதால் விஸ்வாவின் என்கவுண்டர் போலி என்கவுண்டராக இருக்கும் என பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.