தமிழகம் சினிமா

தெருவில் குப்பை அள்ளும் நிலைக்கு சென்ற பிரபல முன்னணி நடிகர்! இதுதான் காரணமா?

Summary:

famous actor cleaning street for election

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில்  பல முன்னணி நடிகர்களுக்கு கொடூரவில்லனாக நடித்து மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான்.

மேலும் பார்ப்பவர்கள் அஞ்சும் அளவிற்கு மிரட்டலான உருவம் கொண்ட இவர் இயல்பில் மிகவும் இரக்க மனம் உடையவர். கஷ்டப்படுபவர்களுக்கு தானே முன் வந்து உதவி செய்பவர்.மேலும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பி போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.மேலும்  இதற்காக சிறைக்கும் சென்றுள்ளார். 

இந்நிலையில் மன்சூர் அலிகான் தற்பொழுது திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் வினோதமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

mansur alikhan க்கான பட முடிவு

அதாவது வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என மக்களிடம் பந்தா காட்டாமல் மிகவும் சாதாரணமாக அவர்களில் ஒருவராக இருந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.  மேலும் மக்களிடம் இயல்பாக பேசுவது, அவர்களுக்கு அம்மிக்கல்லில் சட்னி அரைத்துக் கொடுப்பது, தெருவை சுத்தம் செய்து அவரது கைகளாலேயே குப்பை அள்ளுவது, குப்பை வண்டி ஓட்டி செல்வது மேலும் சைக்கிளில் ரவுண்டு அடித்தபடி ஓட்டு கேட்பது என வினோதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் 

mansur alikha Campaign in dindugal க்கான பட முடிவு

இதனால் திண்டுக்கல் மக்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் அவரிடம்  மிகவும் சாதாரணமாக பழகி வருகின்றனர்.


Advertisement