விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
குடும்பத் தகராறு.. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து செவிலியர் தற்கொலை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வட்டாரபுத்தூர் கிராமத்தில் சேர்ந்தவர்கள் சின்னராசு - சூர்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சின்னராசு ஊராட்சி செயலாளராகவும் அவரது மனைவி சூர்யா செவிலியராகவும் பணியாற்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. இந்த தகராறில் சின்னராசு மனைவி சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார். பின்னர் சின்னராசு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சூர்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு அருகே இருந்த கிணற்றில் தனது மகன்களுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் வெளியே சென்ற சின்னராசு வீடு திரும்பிய போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கம் சென்று மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து விசாரித்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சூர்யாவின் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னராசு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி சூர்யாவையும் அவரது மகன் உதயணையும் சடலமாக மீட்டனர். மேலும் இலட்சனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடும்பத் தகராறில் செவிலியர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.