குடும்ப தகராறு.. தற்கொலை செய்து கொண்ட கணவர்.. போலீஸ் விசாரணை..!

குடும்ப தகராறு.. தற்கொலை செய்து கொண்ட கணவர்.. போலீஸ் விசாரணை..!


Family dispute.. Husband committed suicide.. Police investigation..!

திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சரவணன் - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று வேலை சம்பந்தமாக தர்மபுரி வரை சென்ற சரவணன் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு வந்துள்ளது.

Family Dispute

இதனால் மனம் உடைந்து போன சரவணன்  அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் கணவர் வெளியே வராததால் உள்ளே சென்று சித்ரா பார்த்துள்ளார். அப்போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலரி சத்தம் போட்டு உள்ளார்.

இவரது அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.