தமிழகம்

காதலியை வசியப்படுத்தி தருகிறேன்.! இளைஞர்களின் ஆசையை தூண்டிய போலி சாமியார்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.!

Summary:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த சக்தி என்பவர் ஜோதிடம் பார்த்து வந்துள்ள

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த சக்தி என்பவர் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இவரிடம் நாள்தோறும் சிலர் குறி கேட்டு ஜோதிடம் பார்த்துச்செல்வது வழக்கம். இவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி' என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல்வேறு பூஜைகள் நடத்தி வந்துள்ளார். பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு பூஜை செய்வதால், இவர் அண்டா சாமியார் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், இவரிடம் குடும்பப் பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்ய பலரும் வந்து சென்றுள்ளனர். இந்தநிலையில், கரிசல்குளத்தைச் சேர்ந்த தங்கபேச்சியம்மாள் என்ற பெண் இவர் மேல் பண மோசடி வழக்கு கொடுத்ததையடுத்து போலீசார் சக்தியை அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூரில் சக்தி டிவி என்ற பெயரில் கேபிள் தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் போலி சாமியார். இந்தநிலையில், விளாத்தி குளத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனது டிவியில் பணியாற்றும்படியும் மாத சம்பளம் 25ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து ஒன்றே கால் லட்சம் பணத்தை பெற்றுள்ளார். மேலும் அந்த பெண்ணை ஏமாற்றி 3 லட்சம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கேட்ட போது, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.

மேலும், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஒரு தலையாக காதலிக்கும் இளைஞர்களிடம், காதலியை வசியப்படுத்தி தருவதாக ஏமாற்றியுள்ளார். பொதுமக்கள் முதல் காவல் அதிகாரிகள் வரை இவரது வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். மேலும் இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


Advertisement