பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் என்ன தண்டனை தெரியுமா?

பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் என்ன தண்டனை தெரியுமா?



exam copy punishment

பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் மார்ச் 2- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

exam

தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு, அதிகபட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வை சுமுகமாக நடத்த சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள், முறைகேடுகளை தடுக்க ஆயிரத்திற்கு மேற்பட்ட பறக்கும் படைகள் அமர்த்தப்படவுள்ளனர்.