காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஓட ஓட வெட்டிக்கொலை..! பாண்டிச்சேரியில் பரபரப்பு..!
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஓட ஓட வெட்டிக்கொலை..! பாண்டிச்சேரியில் பரபரப்பு..!

வெடி குண்டு வீச்சு, காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய காங்கிரஸ் பிரமுகரை அடையாளம் தெரிய சிலர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பிள்ளையார்குப்பம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம் (வயது 35). இவர் இன்று காலை திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். கார் கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரிய சிலர் சாம்பசிவம் சென்ற கார் மீது நாடு வெடிகுண்டை வீசியுள்ளனர்.
இதனை அடுத்து காரில் இறந்து சாம்பசிவம் இறங்கி ஓடியுள்ளார், தப்பி ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்ற மர்மநபர்கள் அரிவாளால் அவரை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அரசியல் பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.