தமிழகம்

திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவர்! மனைவி எடுத்த விபரீத முடிவு.

Summary:

Erode girl commit suicide for baby aborted

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) எனவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி(23) என்பவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தனது ஆசை மனைவி IAS படிக்க ஆசைப்பட்டதை அடுத்து பிரதாப் தனது மனைவியை படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் சரஸ்வதி கர்ப்பம் தரித்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு IAS அகாடமியில் இருந்து தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார் சரஸ்வதி. தீபாவளி முடிந்தும் சில வாரங்களாக தனது கணவர் வீட்டில் தங்கியிருந்த சரஸ்வதிற்கு திடீரென கர்ப்பம் கலைந்துள்ளது.

Image result for pregnant

கர்ப்பம் கலைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார் சரஸ்வதி. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். சரஸ்வதி திடீரென வாந்தி எடுத்ததை பார்த்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்னனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார்.

கர்ப்பம் கலைந்தததால்தான் சரஸ்வதி தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரமான என சரஸ்வதியின் தந்தை கொடுத்த புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement